மதுவில் எலி மருந்து கலந்து குடித்து சவரத் தொழிலாளி தற்கொலை..

கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம் ,ஸ்ரீ பால் நகரை சேர்ந்தவர் தெய்வமணி( வயது 54) இவர் கோவை புதூரில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர் நீரழிவு மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த தெய்வமணி பிராந்தியில் எலி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் போலீஸ் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவுவிசாரணை நடத்தி வருகிறார்கள்.