பைக் மோதி வடமாநில பெண் பரிதாப பலி..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்ற ஒரு பெண் மீது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். விசாரணையில் அவர் அருணாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த சுனிதா (வயது 40 )என்பது தெரியவந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாமோதரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைநடத்தினார். இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த பெரியநாயக்கன்பாளையம் ஜி .ஆர் .டி. நகரை சேர்ந்த சல்மான் கங்கா (வயது 28) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.