கோவை காவல்துறை குறை தீர்ப்பு முகாம் – 103 மனுவில் சுமுக தீர்வு..!

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. இதன்படி நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் குறை தீர்ப்பு முகாம் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் நடந்தது. இந்த முகாமில் 114 பேர் மனு கொடுத்தனர். அதில் 3மனுக்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. 8 மனுக்களுக்கு புகார் ஏற்பு ரசீது (சி ..எஸ்.. ஆர்) . வழங்கப்பட்டது. 103 மனுக்கள் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது.