கோவை ஆடிட்டர் தூக்கு போட்டு தற்கொலை… உருக்கமான கடிதம் சிக்கியது

கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் ( வயது 42) இவரது மனைவி சுசித்ரா வினோத்குமார் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரி பாளையம் பகுதியில் இயங்கு வரும் தனியார் மில்லில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார் . அவர் நம்பியூர் காந்திபுரம் வடக்கு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் .இந்த நிலையில் வினோத்குமார் தங்கியிருந்த வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது .இது பற்றி நம்பியூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டில் ஒரு அறையில் தூக்கு போட்டு வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். அவர் வீட்டின் மேஜையில் வினோத்குமார் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள் .அதில் கூறி இருப்பதாவது:- என்னுடன் அலுவலகத்தில் பணியாற்றுவர்களிடம் கடன் வாங்கி உள்ளேன். என்னை நம்பி கடன் கொடுத்த அவர்களிடம் பணத்தை உரிய காலத்தில் திருப்பி கொடுக்க முடியவில்லை. அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, என்னை மன்னித்து விடுங்கள் .என் மனைவி சுஜியை எதுவும் சொல்லாதீர்கள்.என்னுடைய கடனை எப்படியாவது அடைத்து விடலாம் என 3மாதங்களாக போராடினேன் .ஆனால் மேற்கொண்டு அதிக அளவில் கடனாகிவிட்டது எனவே இனிமேல் என்னால் வாழ முடியாது. இதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். என் சாவுக்கு நானே காரணம் ,இவ்வாறு அதில் கூறியிருந்தார்,இதைத் தொடர்ந்து வினோத்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.