கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம், வாரம் தரப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.
மனுக்கள் பதிவு செய்யவும் ஊழியர்கள் கைகளால் எழுதி ஒப்புகை சீட்டு வழங்குகின்றனர். இதற்கு வெகு நேரமாவதால் பொதுமக்கள் கூட்டமாக காத்து இருக்கின்றனர். பழைய நடைமுறையில் கணினிகள் நிறுவி, எவ்வளவு மனுக்கள் எந்தெந்த துறைக்கு பெறப்பட்டன என்கின்ற தகவலை பதிவேற்றம் செய்து வாரந்தோறும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் பதில் அளிக்கப்பட்டு விட்டதா ?என பார்க்காமல், தீர்வு ஏற்படுத்தப்பட்டதா? என்பதை ஆராய வேண்டும் ஏனெனில் சமீப காலமாக அரசு துறை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் பதில் கடிதங்களில் உங்களது கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது. என்று தான் வருகிறது. எப்பொழுது தான் தீர்வு காணப்படும் என்கின்ற கேள்விக்கு பதில் இல்லாமல் முடித்து வைக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கூடுதல் கவனம் செலுத்தி மனுக்கள் மீது தீர்வு ஏற்பட்டதா ? முயற்சிக்க வேண்டும். என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
Leave a Reply