கோவை மாவட்டம் நெகமம், செங்குட்டு பாளையம் அருகே உள்ள முட்டம் பாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் மோகன்தாஸ் ( வயது 17 )இவர் நேற்று கோவை டபொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோதவாடி பிரிவு அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் ...
கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் ,80 அடி ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி .இவரது மகள் ஆனந்தி (வயது 23) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம் .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தி நேற்று வீட்டில் ...
கோவை உக்கடம் சிலேட்டர், அவுஸ்காலனி அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கிட்டான். இவரது மகன் மகேந்திரன் (வயது 35) மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று ஆடி திருவிழாவை யொட்டி அங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து மகேந்திரன் மைக்கில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றார். ...
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் M.S. முத்துசாமி,IPS., அவர்களின் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்தாய்வு கூட்ட இறுதியில் சிறப்பாக புரிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் ஜெயலட்சுமி, காவல் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதியில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்நிலையில், நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைச்சாலை 6வது கொண்டை ஊசி வளைவில், ஒரு சிறுத்தை ஜாலியாக நடமாடியது. அப்போது அவ்வழியே காரில் சென்றவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ...
சுதந்திர தினத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – கலெக்டர் கிராந்தி குமார் அறிவிப்பு..! கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு வாணிப கழகம் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக் கூடங்கள், ...
கோவையில் ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை..! கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் சாலை விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை ...
மகனை பயமுறுத்த கழுத்தில் சேலையை கட்டி தற்கொலை செய்வதாக மிரட்டிய தாய் சாவு.. கோவை: மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அப்பநாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர் .இவரது மனைவி யமுனா பானு ( வயது 34) இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகனும், மகளும் உள்ளனர் .மகன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ...
பாம்பு கடித்து விவசாயி சாவு..கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கொண்டை கவுண்டன் பாளையத்தை சென்றவர் தர்மலிங்கம் (வயது73) விவசாயி. இவர் அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாரத விதமாக இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ...
மகனுடன் மொபட்டில் சென்ற தந்தை லாரி மோதி பலி.. கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள சாமநாயக்கன்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 68 )இவர் நேற்று தனது மகன் பாஸ்கரனுடன் (வயது 42) மொபட்டில் பெரியநாயக்கன்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வங்கி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாகவந்த ...












