கோவில் திருவிழாவில் மைக் சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாப பலி..

கோவை உக்கடம் சிலேட்டர், அவுஸ்காலனி அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கிட்டான். இவரது மகன் மகேந்திரன் (வயது 35) மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று ஆடி திருவிழாவை யொட்டி அங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து மகேந்திரன் மைக்கில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றார். சரியாக சத்தம் வரவில்லை .இதனால் அவர் ஒலிபெருக்கி பிளக் சரியாக மாட்டப்பட்டுள்ளதா? என்று தொட்டுப் பார்த்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அதே இடத்தில் அவர் இறந்தார் .இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..கோவில் திருவிழாவில் அன்னதானத்தின் போது மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..