பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறும் பெண்கள் தங்கள் மறைவுக்கு பிறகு ஓய்வூதியத்தை பெறும் வாரிசுதாரர் நியமனத்தில் கணவருக்குப் பதிலாக குழந்தைகள் பெயரைச் சேர்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மத்திய குடிமைப் பணி விதிகள் திருத்தம் செய்யப்பட்ட அறிவிப்பு நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, பெண் அரசு ஊழியர்கள் மறைவுக்குப்பின் ...

ஜப்பான், சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதன் காரணமாகக் கடந்த 3 நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை முதல் ராமேஸ்வரம் ...

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தையடுத்து நிறுவனம் தமிழ்நாடு அரசால் மூடப்பட்டது. இந்நிலையில், ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜன.2) மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த மாதம் 4-வது வாரத்தில் ...

முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 ...

பசுமை மற்றும் தூய்மையான இமாச்சல்பிரதேசம் என்ற இலக்கை அடையும் நோக்குடனும், இ-வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களை வாங்க வேண்டாம் என அம்மாநில அரசுத்துறைகளுக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை தேவைப்பட்டால், மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அம்மாநில அரசுத் துறைகள் ...

கோவை கம்பட்டி காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து இவரது மனைவி ஜெனிபர் (வயது 22) இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது .நேற்று கணவன்- மனைவி இருவரும் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றனர். அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. ...

புத்தாண்டு தினத்தில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டி திடீர் மாயம். கோவை ஜன 3 கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள தாளத்துறையைச் சேர்ந்தவர் ராமன், இவரது மனைவி மலர் (வயது 60 ) இவர் 31 ஆம் தேதி இரவுபுத்தாண்டு பிராத்தனைக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ...

கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் சளி மாதிரியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியதில் அந்த பெண்ணிற்கு ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து ...

புதுடெல்லி: செங்கடலில் ஹவுதி படையினர் அட்டூழியம் அதிகரித்து வருவதால் இந்திய எல்லை கடற்பகுதியில் 5 போர்க் கப்பல், 1 போர் விமானம் ஆகியவற்றை நிலை நிறுத்தி கடற்பகுதி கண்காணிப்பை இந்திய கடற்படை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ...