கோபி பவுண்டேஷன் மகளிர் மேம்பாட்டு குழு இணைந்து நடத்தும் அன்னையர் தின விழா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்ம கோபி பவுண்டேஷன் மகளிர் மேம்பாட்டு குழு இணைந்து நடத்தும் அன்னையர் தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர்க்கான போட்டிகள் பின்வருமாறு பேச்சுப்போட்டி பாட்டு போட்டி கோல போட்டி தீயில்லா சமையல் மெஹந்தி மேக்கப் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது . இப்போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் மூன்று வெற்றி பெற்றோருக்கு சிறப்பு விருந்தினர் டாக்டர் கோமதி மற்றும் லைப் ஸ்டைல் உமா கேடயம் மற்றும் வளர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நம்ம கோபி பவுண்டேஷன் நிறுவனர் தலைமை உரை டாக்டர் அனூப் அனைவரையும் வரவேற்று பேசினார் மற்றும் தன்னார்வலர்கள் கோபிநாத் ராஜி ஐஸ்வர்யா சந்துரு விக்னேஷ் காவியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..