ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தை சோகத்தில் ஆழ்த்திய சேட்டிலைட் இணைய சேவை… இந்தியாவிற்கு வரும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்..!!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஸ்டார்லிங் செயற்கை கோள் சேவைகள் (GMPCS) பெற விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் இத்தகைய உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங் பெறும். ஏற்கனவே இந்தியவில் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சேட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான ஒப்புதலை பெற்றுள்ளன.

ஸ்டார்லிங் நிறுவனத்தின் இணைய வேகம் எப்படி இருக்கும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. டவுன்லோடு ஸ்பீடு 25 மற்றும் 220 Mbps, வேகத்திலும் அப்லோடு வேகம் 5 டூ 20 எம்பிபிஎஸ் வேகம் என்ற அளவிலும் இருக்கும். பெரும்பாலான பயனர்கள் டவுன்லோடு வேகம் 100 Mbps ஆக இருக்கும் என்று ஸ்டார்லிங் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இதுபோன்ற வேகம் தற்போது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

அந்த வகையில், இந்தியாவிலும் ஸ்டார் லிங் சேவையை கொண்டு வர எலான் மஸ்க் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை தொடங்கினார். இந்த நிலையில், ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ஸ்டார் லிங் நிறுனத்திற்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

சேட்டிலைட் மூலமாக இணையசேவை வழங்கும் ஸ்டார்லிங் இந்தியாவுக்கு வந்தால் நாட்டின் ஊரக பகுதிகளில் அதிவேக இணைய இணைப்பை பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் தனது நிறுவனத்தின் செயல் அமைப்பு உள்ளிட்டவற்றை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையிடம் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

அதன்பிறகு தொலைத்தொடர்புத்துறையிடம் இருந்து சான்றிதழை பெறும். அதன்பிறகு தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து இது தொடர்பான விருப்பக் கடிதம் தொலைத்தொடர்பு செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறைகள் முடிந்த பிறகு சேட்டிலைட் தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஸ்டார் லிங் நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைக்கும்.

ஸ்டார்லிங் நிறுவனத்தின் இணைய வேகம் 4 ஜி அளவில் இருக்கும் என்றும் 5 ஜி வேகத்திற்கு இணையாக இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சேட்டிலைட் அடிப்படையிலான இணைய சேவை இந்த நிறுவனம் வழங்குவதால் அதன் வேகம் இந்த அளவுக்குத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டார்லிங் நிறுவனத்தின் இணைய சேவைக்கான விலை எந்த அளவு இருக்கும் என்று அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், முதல் ஆண்டில் விலை சுமார் ₹1,58,000 ஆக இருக்கலாம் என்று ஸ்டார்லிங் நிறுவனத்தின் இந்தியாவுக்கான முன்னாள் தலைமை அதிகாரி கூறினார். பயனர்களுக்கான அடிப்படை விலை ரூ.37,400 மற்றும் சேவைக்கான கட்டணமாக மாதம் ரூ.7,425 என்ற அளவில் கட்டணம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், இறுதி கட்ட விலை விவரத்தை ஸ்டார் லிங் நிறுவனம் உரிமைத்தை பெற்ற பிறகே வெளியிடும் எனத் தெரிகிறது.

வாஷிங்டன்: எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தொடங்க விண்ணப்பித்து இருந்த நிலையில், விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்றும் இதனைத் தொடர்ந்து ஸ்டார்லிங் நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் செயற்கைகோள் மூலமாக இணைய சேவையை வழங்கி வருகிறது. சுமார் 70 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது இந்த நிறுவனம். உலகம் முழுவதும் தனது ஸ்டார்லிங் நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்தும் கனவில் எலான் மஸ்க் உள்ளார்.