தனது தந்தை ராஜீவ் காந்தி மன்னிப்பின் மதிப்பை கற்றுத்தந்தார் என ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். அவரின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கோவை சென்றார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சி மற்றும் கோவை வ.ஊசி, மைதானத்தில் நடைபெறும் பொரு நை அகழ்வாராய்ச்சி கண்காட்சிம் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் கண்காட்சியை முதல்வர் திறந்துவைத்துப் பார்வையிடுகிறார். இந்த நிலையில் இன்று ஊட்டி சென்ற ...

இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சரிவு வரலாறு காணாத அளவிற்கு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் களம் இறங்கிய நிலையில், அரசியல் நெருக்கடியும் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து எப்படி மீண்டு வருவது என ...

கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து,எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய ...

சென்னை: பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்படக்கூடியது இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவைபயன்படுத்தி, தனிச் சிறப்பு உடையதாக ...

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்த மாதம் இருபத்தி நான்காம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. அடுத்த வாரம் டோக்கியோவில் நடைபெற உள்ள “குவாட்” நாடுகள் மகாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே மாதம் ...

சென்னை: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12வது மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு ...

கோவை: தகவல் தொழில்நுட்ப துறையில் சிப் தேவைகளுக்கு சீனா, தைவானை தேடுகின்றனர் எனவே சிப் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென கோவையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் சார்ந்த 33 தொழில் அமைப்புகளுடன் முதலமைச்ச் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். இந்த கூட்டத்தில் தொழில்துறையில் ...

கோவையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்பட வசனத்தை திமுகவினரும், மக்கள் நீதி மய்யத்தினரும் போஸ்ட்டராக அடித்து ஓட்டியிருப்பது சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட் ” திரைப்படம் மே 7 ம் தேதி வெளியாகி இருந்தது. இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக ...

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அந்த மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர… மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் ...