கோவையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்பட வசனத்தை திமுகவினரும், மக்கள் நீதி மய்யத்தினரும் போஸ்ட்டராக அடித்து ஓட்டியிருப்பது சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட் ” திரைப்படம் மே 7 ம் தேதி வெளியாகி இருந்தது. இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
கோவையில் திமுகவினர் ஒட்டியிருந்த போஸ்டரில் “பீஸ்ட்” திரைப்படத்தில் வரும் வசனமான பயமா இருக்கா? 2024 இன்னும் பயங்கரமா இருக்கும் என திமுகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் விக்ரம் திரைப்படத்திற்காக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் பயமாவது.. பயங்கரமாவது.. எதுவானாலும் பார்த்துக்கலாம் என விக்ரம் திரைப்பட போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திமுக, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
Leave a Reply