ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையேயான பிரச்சனைக்கு தீர்வாக பள்ளிகளில் காலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ...

ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை ...

வரும் கல்வியாண்டு ( 2022-2023 ) முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பினை ...

சென்னை: மின்சார கொள்முதல் தொடங்கி சட்டசபை இடமாற்றம் வரை பல தகவல்களை பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்முடைய கோட்டையில் எங்கு ஓட்டை உள்ளது. யார் மூலமாக தகவல்கள் கசிகின்றன என்று கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் மு.க. ஸ்டாலின். மாமல்லபுரத்தில் புதிய சட்டசபையை அமைக்க திமுக ...

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று சென்னை பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ...

அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா- விடை நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதி, புனித தோமையர் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு முன் வருமா? ...

சென்னை: கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம், தொல்பொருட்கள் நேர்த்தி ஆகியவை முதிர்ச்சியான நாகரீகத்துக்கு சான்றாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கையில், மாண்புமிகு ...

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்சே சூசகமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் யோஷித ராஜபக்சே, மனைவியுடன் இலங்கையைவிட்டு வெளிநாடு ஒன்றுக்கு இன்று காலை தப்பி ஓடிவிட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதி உச்சத்தில் இருப்பதால் மக்கள் தொடர் ...

திமுகவின் தீவிர கொள்கை பிடிப்பாளரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்துள்ளார். திமுக தலைமை மீது கடந்த சில வருடங்களாகவே அவர் அதிருப்தியில் இருந்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் மூத்த நிர்வாகிகளாக இருக்கும் பல தலைவர்களின் மகன்களுக்கு எம்.எல்.ஏ ...

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். பின்னர், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு ...