லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலும், அவரது மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் அரசு மரியாதையுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன. மன்னர் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராணி எலிசபெத்துக்காக காத்திருந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது கணவர் பிலிப், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் காலமானார். ...

திருப்பதி திருமலையில் தொலைபேசி மூலமாக பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலர் சுப்பா ரெட்டி கலந்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறினார். இதுவரை இல்லாத ...

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “திராவிட மாடல்” எனும் நூல் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் திடலில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ...

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். ராணியின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் அரச குடும்பத்துக்கு சொந்தமான பல்மோரல் கேஸ்ட்லே (Balmoral Castle) இல்லத்தில் உள்ளது. நேற்று  காலை அங்கிருந்து அவரது ...

உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அதிக வட்டி கேட்டும், ஆபாசமாக புகைப்படங்களை அனுப்பி மோசடி கும்பல் ஒன்று மிரட்டி வருவதாக புகார் ஒன்று எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு, கலெக்சன் ஏஜெண்டான உத்தரபிரதேசத்தை ...

நியூயார்க்: இப்போதெல்லாம் பூமிக்கு அடியில் இருக்கும் பழைய எலும்பு கூடுகள் அதிக அளவில் ஆராய்ச்சிகளில் கிடைக்கின்றன. கீழடியில் கூட சமீபத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு கூடுகள் பல கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் தெற்கு ஆசியாவில் உள்ள போர்னியோ என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

வால்பாறையில் பகலில் சாலையை கடக்கும் காட்டு யானைகள் கூட்டம் கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள முருகன் எஸ்டேட்டிற்கு செல்லும் பிரிவில் உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறிய எட்டு யானைகள் பகலில் சாலையை கடந்தது ...

கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தேசிய மீன்வளவாரியத்தில், ...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக ...

கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளனர் மதுரைக்கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள். உசிலம்பட்டி பகுதியில் உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் பேசியிருக்கும் நீதிபதிகள், ‘அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல், அவர்களின் திறமை ...