கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்….

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்….

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மோகன் குமார் @ மொக்கை மோகன் (19) மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி நபர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக மோகன் குமார் @ மொக்கை மோகன் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகளான மோகன் குமார் @ மொக்கைமோகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

‌இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 22 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.