பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட 18 லட்சம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த மனித பல்… வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்..!!

நியூயார்க்: இப்போதெல்லாம் பூமிக்கு அடியில் இருக்கும் பழைய எலும்பு கூடுகள் அதிக அளவில் ஆராய்ச்சிகளில் கிடைக்கின்றன.

கீழடியில் கூட சமீபத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு கூடுகள் பல கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் தெற்கு ஆசியாவில் உள்ள போர்னியோ என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

போர்னியா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு கூடு 31 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த எலும்பு கூட்டில் அறுவை சிகிச்சை கூட செய்யப்பட்டு இருந்தது.

உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட எலும்பு கூடு இதுதான் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் ஐரோப்பாவில் உள்ள ஜார்ஜியாவில் மனிதருக்கு சொந்தமான பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு நடந்த அகழ்வாராய்ச்சியில் இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டது. ஓரோஸ்மானி என்ற நகரத்தில் இந்த பல் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கே பெரிய அளவில் எலும்பு கூடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருந்ததால் இங்கு அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டு வந்தன.

கொரோனாவிற்கு முன்பாக 2019ல் தான் இங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. கிரிகோரி கோபாலினி என்பவர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இங்கு ஏற்கனவே இந்த நிலையில்தான் அங்கு கிடைத்த அழிந்து போன விலங்குகளின், மான் இனங்களின், நரிகளின் உடல் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இங்கு கிடைக்கும் மனித தடயங்களும் கண்டிப்பாக மிக பழமையானதாகவே இருக்கும் என்று கருதப்பட்டது.

அந்த நம்பிக்கையில்தான் இந்த பல ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டது. அதில் வந்த முடிவுதான் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது. இதில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில், அந்த பல் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதாவது 18 லட்சம் ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதருக்கு சொந்தமான பல் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுதான் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்து இருக்கிறது.

அப்படி என்றால் மனித இனம் 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனேவே இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளும் 18 லட்சம் வருடம் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆப்ரிக்காவிற்கு வெளியே முதல்முறை ஒரு இடத்தில் இருந்து இவ்வளவு பழமையான மனித உறுப்புகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை மனித வரலாறு நாம் நினைத்ததை எல்லாம் சுக்குநூறாக உடைக்கும்