வரும் 19ம் தேதி ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு: 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலி – அரண்மனை அறிவிப்பு..!

ங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். ராணியின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் அரச குடும்பத்துக்கு சொந்தமான பல்மோரல் கேஸ்ட்லே (Balmoral Castle) இல்லத்தில் உள்ளது. நேற்று  காலை அங்கிருந்து அவரது உடல், சாலை மார்க்கமாக எடின்பர்க்கில் உள்ள ஹோலி ரூட் ஹவுஸ் (Holyrood house) அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளை பிற்பகல் வரை வைக்கப்பட உள்ளது.

பின்னர்இன்று  செயின்ட் கிலேஸ் கதீட்ரல் (St Giles’ Cathedral தேவாலயத்துக்கு ஊர்வலமாக ராணியின் உடல் எடுத்து செல்லப்படுகிறது. ஊர்வலத்தில் பங்கேற்கும் அரச குடும்பத்தினர், ராணியின் உடலை பெற்றுக் கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராணியின் உடல் எடின்பர்க்கில் இருந்து தனி விமானத்தில், இங்கிலாந்தின் நார்த்ஹோல்ட் (Northolt) நகருக்கு கொண்டு வரப்படுகிறது.பின்னர் சாலை மார்க்கமாக ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.தொடர்ந்து, அவரது உடல் குயின்ஸ் கார்டன், நாடாளுமன்ற வீதி, நாடாளுமன்ற சதுக்கம் வழியாக வெஸ்ட் மினிஸ்டர் ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு, 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இதையடுத்து செப்டம்பர் 19ம் தேதி திங்கள்கிழமை, ராணியின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.