சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி, வரும் 24ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதி வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளும், விமான நிறுவனங்களும் தங்களின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால் சொந்த ...

உலகம் முழுவதும் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டாலும், முன்பிருந்த அளவுக்கு இல்லாமல், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிவிட்டனர். இப்படியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று முதலில் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கயிருக்கிறது. சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ...

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு சார்பில் வேஷ்டி , சேலை ,பொங்கல் சிறப்பு தொகுப்பு, கரும்பு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுகளுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்கப்படுவதுண்டு. தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை 2009ம் ஆண்டு முதல் ...

Dகோவையில் டி.வி. திருடிய போலீஸ்காரர் கைது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தாசிம் (வயது27). இவர் அதே ஊரை சேர்ந்த சாருக்கு என்பவருடன் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கி டி.வி மற்றும் கியாஸ் அடுப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 20-ந் தேதி தாசிம், சாருக்கு ஆகியோர் கண்ணம்பாளையம் பகுதிக்கு டி.வி.க்களை விற்பனைக்கு எடுத்து ...

ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெசவுத்தொழில் நவீனமயமாக்கல், ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைவினை மேம்பாட்டுத்திட்டம், ஜவுளித் தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய ஜவுளி உற்பத்திப் பொருட்களை ...

திமுகவில் உட்கட்சி தேர்தல் முடிவடைந்த பிறகு சில புதிய அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்பொழுது புதிய நிர்வாகிகளின் நியமனம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கூட்டம் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள திமுக தலைமை கழகமான அண்ணா ...

திமுகவின் ஊழலை புகார் செய்ய வெப்சைட் தயாரிக்க உள்ளோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக மற்றும் அரிமா சங்கம் சார்பில் வாஜ்பாய் 98 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு 100 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ...

கோவை ரத்தினபுரி சின்னப்பன் விதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மஞ்சுளா (வயது 50)கூலி தொழிலாளி .இவர் உட்பட 12 பேர் அதே பகுதியில் சிட்பண்ட்ஸ் நடத்தி வரும் பாபு ,செல்வி, ஆனந்தி, ஆகியோரிடம் ஏலச்சீட்டு போட்டிருந்தார்கள். தவணை காலம் முடிவு அடைந்ததும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் 12 பேரிடமும் சுமார் ரூ 40 ...

கோவை விளாக்குறிச்சி ரோடு சேரன் மாநகரை சேர்ந்தவர் ஹரிகுமார் துறைசாமி (வயது 62). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு எனது நண்பர் ஒருவர் மூலம் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம் வெளிநாட்டில் வேலை வருங்கி தரும் ...

கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்காட்டுக்கு வனப் பகுதி வழியாக 2 ரயில் பாதைகள் உள்ளன. இதில் முதலாவது (ஏ) பாதை சுமாா் 17 கிலோ மீட்டா் தொலைவும், இரண்டாவது (பி) பாதை 23 கிலோ மீட்டா் தொலைவும் கொண்டது. யானைகள் வழித்தடத்தில் உள்ள இந்த தண்டவாளத்தில் ரயில் மோதி யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. ...