இந்தியா முழுவதும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை : கோவையில் தங்கிய ஏமாற்ற முயன்ற போது சிக்கிய நபர் …

இந்தியா முழுவதும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை : கோவையில் தங்கிய ஏமாற்ற முயன்ற போது சிக்கிய நபர் …

 

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடென்சி ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த போராடா சுதீர் என்பவர் வந்தார். போலியான ஒரு பில்லை காண்பித்து அங்கு இரவு தங்கி அந்த ஹோட்டலில் உள்ள சலுகைகளை பயன்படுத்தி விட்டு நேற்று காலை ஹோட்டலை காலி செய்து விட்டு செல்ல முயன்ற போது நிர்வாகிகள் நிறுத்தி சோதனை செய்த போது தான் நேற்று பணம் செலுத்தி விட்டதாக போலியான பிள்ளை காண்பித்து உள்ளார். பின்பு ஹோட்டல் நிர்வாகத்தினர் கணக்கை சரி பார்த்த போது இவர் போலியான ரசீதை காண்பித்தது தெரியவந்தது. இது தொடர்பாக மேற்படி நபர் மீது காவல் நிலையம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கோவை பந்தய சாலை காவல் துறையினர் அந்த நபரிடம் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் இவர் இந்தியா முழுவதும் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தாஜ் ஹோட்டல், லீ மெரிடியன் ஹோட்டல், ஐ.டி.சி கிராண்ட் சோலா ஹோட்டல் ஆகியவற்றில் போலியான முகவரி மற்றும் தகவல்களை கொடுத்து தங்கிக் கொண்டு அங்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு சென்று உள்ளது தெரிய வந்தது. அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.