கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி பேசுகையில் மாவட்டத்தில் சிறு மற்றும் குரு தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக திகழ்வதாகவும் இங்கு உள்ள தொழிற்சாலைகளை மென்மேலும் வளர்ப்பதற்கும் புதிய தொழில் நிறுவனங்களை ...

இணையதளம் மூலம் ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் நூதன மோசடி – 12 பேரை பெங்களூரில் வைத்து மடக்கிப் பிடித்த கோவை மாநகர போலீசார்  டேட்டிங் செயலி மூலம், ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் நூதன மோசடி தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், பெங்களூரில் பதுங்கியிருந்த 12 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர தனிப்படை ...

ஒரே பத்திரத்தை வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன ஊழியர் கைது கோவை போத்தனூர் ஸ்ரீனிவாசநகரை சேர்ந்தவர் முத்து இருளப்பன் ( 30). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக தனது வீட்டு பத்திரம் மூலம் சாய்பாபா காலனியில் உள்ள ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அரியர் தொகை வழங்க தொழிற்சங்கத்தினர் ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்தினரை வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டமும் அறிவித்திருந்தனர் இந்நிலையில் ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்தினர் மறியல் போராட்டம் அறிவித்த எம்ஜிஆர் தோட்டத்தொழிலாளர் சங்கம், ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஆனைமலை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், ...

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தபால் நிலையங்களில் மூவர்ணக்கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள, 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் ...

கோவையில் பெண் காவலரின் மனிதாபமான செயலை மாவட்ட காவல் எஸ்.பி.பத்ரி நாராயணன் பாராட்டி கௌரவித்தார். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் ஆமினா, மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத நிலையில் கண்டறியப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டு, முன்னிருந்து ...

தமிழகத்தில் நீலகிரி உள்பட சில மாவட்டங்களில்(ஆரஞ்சு அலர்ட்) ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று கூடலூர், பந்தலூர் உள்பட மாவட்டத்தில் ஒரு ...

ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant உள்ளது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு ...

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- வேளாண் உழவர் நல அமைச்சகத்தின் 2-வது முன்கூட்டிய அறிக்கையின் படி 2021-22 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழை 9.59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 3.51 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி, கோவை, திருச்சி, நெல்லை, ...

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மாநகராட்சி பகுதிகளில் பருவ மழை காலங்களில் மழைநீர் அதிகம் தேங்க கூடிய கிக்கானி பள்ளி சாலை, லங்கா கார்னர், மணியகாரன்பாளையம் சாலை, அவினாசி மேம்பாலம், வாலாங்குளம் ஆகிய 5 இடங்களில் புதிதாக கான்கிரீட் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் ...