மாநில தீவன அபிவிருந்தி திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டில் கூடுதலாக இயந்திர புல் வெட்டும் கருவி 75 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் சுய உதவி குழு உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் இருக்க வேண்டும்.பயனாளி கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் இது போன்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே 5 வருடங்கள் பயனடைந்தவராக இருக்கக் கூடாது.மேலும் தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 4919 பங்கு தொகையை செலுத்துவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் .
30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிய பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.