வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர் கைது: பெண் உள்பட 2 பேர் தலைமறைவு
லாக்கரில் இருந்த ஒரிஜினல் நகைகளை பாக்கெட்டிலிருந்து எடுத்து போலி நகைகளை வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கூட்டத்துக்கு வலை
கேரளா பூர்வீகமாக கொண்ட ஐ சி எல் ஃபின்கார்ப் நிறுவனம் தனியார் நிதி நிறுவனம். நகைகளை அடகு வைத்து வட்டிக்கு பணம் தந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் கிளையில் தலைவராக கார்திகா, மேனேஜராக சரவணகுமார் , நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக சத்யா பணியாற்றி இருக்கின்றனர். வருடாந்திர தணிக்கை நிதி நிறுவன கிளையில் நடந்தி இருக்கின்றன. அப்போது தங்க நகைகள் சரி பார்த்து போது லாக்கரில் போலி நகைகள் வைத்து உள்ளதை கண்டுபிடித்தனர். மேலும் இது குறித்து நிறுவன ஊழியர்களிடம் விசாரித்த போது 3 பேர் இந்த சதி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மூவரும் முன்னதாக கிளையில் வரவு செலவு வைத்திருக்கின்ற வாடிக்கையாளர்கள் , உறவினர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் என 10 க்கும் மேற்ப்பட்டோரின் ஆவணங்களை பயன்படுத்தி போலி கையொப்பமிட்டு மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது 597 கிராம் போலி நகைகளை 25 பொட்டலங்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் தந்தது போல கணக்கு காட்டி 26 லட்சம் ரூபாயை நூதன கொள்ளையடித்து இருக்கின்றனர். நிதி நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமின்றி அடகு வைக்க வந்த 11 நகை பொட்டலங்களில் இருந்த 227 கிராம் ஒரிஜனல் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்து அதற்க்கு பதிலாக போலி நகைகளை லாக்கரின் அடகு நகையாக கணக்கு காட்டியிருக்கின்றனர். இதுகுறித்தி நிதி நிறுவனம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் தந்திருகின்றனர். புகாரின் அடிப்படையில் உதவி ஆணையாளர் பார்த்திபன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் ரேணுகா வழக்கு பதிந்திருக்கின்றார். மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சத்யாவை கைது செய்த நிலையில் போலி நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். தலைமறைவான கார்திகா, சரவணகுமாரை உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நூதன முறையில் திருடிய பணம் நகைகளை பங்கிட்டு வீடு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி இருக்கலமென தகவல்கள் தெரிவிக்கின்றன.