கைத்தறி ஆடைகளுக்காக ஆடை அலங்கார அணிவகுப்பு விழா : கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி!

கைத்தறி ஆடைகளுக்காக ஆடை அலங்கார அணிவகுப்பு விழா : கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி!

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ , கோவை மக்கள் சேவை மையம் & Dream zone நிறுவனம் சார்பில் தொடர்ந்து “தேசிய கைத்தறி ” முன்னிட்டு கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு விழா சிறப்புற நடந்து முடிந்துள்ளது.

கைத் தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 – ம் தேதி கைத்தறி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்கள் மத்தியில் கைத்தறி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை கல்லூரிகளில் ‘ஃபேஷன் ஷோ’ ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஒருங்கிணைக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரிடம் கைத்தறி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முதல் நோக்கம். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும் இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாணவிகள் முற்றிலும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கைத்தறியிலான தாவணி, சேலை போன்ற ஆடைகளே அணிந்து வர வேண்டும். அணிவகுப்புக்குப் பின்னர் கைத்தறி குறித்த பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் வெற்றிப் பெறுபவர்களில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் இரண்டு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இறுதியாக கோவை மாவட்டத்தின் கல்லூரிகளிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இறுதிப் போட்டி நடைபெறும். கைத்தறி ஆடைகள், நெசவாளர்கள் என இதுகுறித்த விழிப்புணர்வை இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.