கோவை :தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரைபணிபுரிய வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் டாக்டர்களுக்கு மன உளச்சல் ஏற்படுகிறது.இந்த ஆணையைரத்து செய்து பல வருடங்களாக அமுலில் இருந்து வரும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்பதை அமல்படுத்த கோரி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் அதன் தலைவர் டாக்டர். ரவிசங்கர் ,செயலாளர் டாக்டர் .ஜெய் சிங் ஆகியோர் தலைமையில் டீன் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்..