ஓபிஎஸ் தரப்பு நீதிபதி, குரு கிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம் கோரியதால் ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வாசித்தார். அப்போது, அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் ...

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி டெல்லி – மீரட் விரைவுச் சாலையில் உள்ள சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். வடமேற்கு டெல்லி மற்றும் காஜிபூர் எல்லையில் அமைந்துள்ள சிங்கு எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ...

கோவை :தமிழ்நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினார் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும். பின்னர் இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், குட்டைகளில் கரைப்பார்கள் .கோவையில் குறிச்சி ...

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக் கழகத்தில்‌ பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வு வார‌ம் – மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்பு பார்த்தீனியம் என்பது ஒரு நச்சு களை செடியாகும். இந்த களைச் செடியானது, உலகம் முழுவதுமாக பரவி பல விதமான தீங்கினை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மை சாகுபடிக்கும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த பார்த்தீனிய செடி ஒவ்வொன்றும் சுமார் 10,000 ...

கோவை மாவட்டம் வால்பாறையில் வருகின்ற 31 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையில் காவல் ஆய்வாளர் கற்பகம் முன்னிலையில் இந்து முன்னணியினருடன் ஆலோசக்கூட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 90 சிலைகள் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள ...

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்துள்ள முக்கிய மாநகரங்களில் ஒன்றான கோவையில், தனி நபர் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்தல், சாலைகளை விரிவாக்கம் செய்தல் ...

தனியார் பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதையடுத்து ஆவின் பால் பாக்கெட்டின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அரசின் ஆவின் நிறுவனம், 38.26 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ளவற்றை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தமிழகத்தின் பால் தேவையில் ...

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரினால் கோதுமையின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. போர் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கிருந்து கோதுமை ...

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்றசுதந்திர தின விழாவில் பேசியமுதல்வர் மு.க.ஸ்டாலின், ”அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்திவழங்கப்படும்” என்று அறிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி ...

கூகுள்-பே மற்றும் போன்-பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. மக்களின் அன்றாட பயன்பாட்டில் ஒன்றாக மாறியுள்ள டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற செய்தியானது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏதும் ...