மதுரையில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.90, கேரட் ரூ.80-க்கு விற்பனையானது. மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு தென் மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலும், வடமாநிலங்களிலும் அண்மைக் காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. ...

சம்பா: பாதுகாப்புப் படையில் ராணுவம், விமானப் படை, கப்பல் படைக்கு 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்யும் ‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தில் சேர்பவர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். அதில் ...

பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிளான போதை ஆயில் பறிமுதல் பட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ...

புதுடில்லி : மதம் மாறியவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே ...

போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்: கோவையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை… கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட பொழுது ...

கோவை வழித்தடத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூா் – கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் ...

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது, பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் வாழைக்கான முன்னறிவிப்பு விலையை உருவாக்கியுள்ளது. வேளாண் மற்றும் உழவர் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின் படி, 2021-2023 ஆண்டில் இந்தியாவில் வாழை 9.59 ...

கோவை: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அதன் விவரம் வருமாறு:- சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம்.ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி .கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம்.செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம். சென்னை பரங்கிமலை காவல்துறை ...

கோவையில் இருந்து மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை 2023-ம் ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை – ஜபல்பூா் இடையே கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் முதல் வாரம் வரை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் வரை ...

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரெயில் நிலையம் எதிரில் தமிழ்நாடு போலீஸ் துறை ஹமில்டன் கிளப் அமைந்துள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக பொதுமக்கள் பார்வையிட அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால், (திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும்) ...