ஹிஜாப் வழக்கு – உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!

ல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.

கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா இருவரும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதாவது, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு ஒரு நீதிபதி ஆதரவாகவும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனிடையே, கர்நாடகாவில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம், இஸ்லாமிய மாணவிகள் சிலர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய ஒரு நீதிபதி ஆதரவாகவும், ஒரு நீதிபதி எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தார் உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா. ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம் (தடை செல்லாது) என உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு துலியா தீர்ப்பு வழங்கினார். ஒரே வழக்கில் இரு நீதிபதிகள் இருவேறு தீர்ப்பு வழங்கியிருப்பதால் ஹிஜாப் தொடர்பான வழக்கை 3வது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒரே வழக்கில் இரு நீதிபதிகள் இருவேறு தீர்ப்பு வழங்கியிருப்பது முரணாக பார்க்கப்படுகிறது.