தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்பை அதிகரிக்க புதிய திட்டம்… பிரதமரின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 280 இடங்களில் தொழிற்பயிற்சி மேளா..!

பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நடத்தப்படுகிறது.

தொழில் வாய்ப்புகள், தொழில் நேரடி செயல் முறை பயிற்சிகளை ஊக்குவிக்க திறன் இந்தியா திட்டம் எனப்படும் ஸ்கில் இந்தியா மிஷன் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் நாடு முழுவதும் 280 இடங்களில் தொழில் பயிற்சி மேளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளூர் வணிக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதாந்திர உதவித் தொகையினை மத்திய அரசு வழங்கும்.

வேலைவாய்ப்பினை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கள்கிழமை இந்த தொழில் பயிற்சி மேளா நடத்தப்படும். இதில் பங்கேற்கும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் நேரடி திறன் பயிற்சியும் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர்.