மகாபலிபுரத்தில் மாபெரும் அரசியல் திருவிழா

மிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்கள் உட்பட சுமார் 20,000 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் முக்கிய முகங்களான முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ஆகியோருடன் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன், தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் மா. சேகர், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்து மற்றும் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாக தவெகவில் தங்களை இணைத்துக் கொள்ளவுள்ளனர்.

அதிமுக உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமை மீதான அதிருப்தி காரணமாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த பிரம்மாண்டமான கூண்டோடு கட்சித் தாவல் தவெகவின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.