ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை… 3,095 ரவுடிகளை ஸ்கெட்ச் போட்டு அலேக்காக தூக்கிய தமிழக காவல்துறை அதிரடி..!

மிழக காவல்துறையின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி!

தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் மூன்று நாட்களில் கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தமிழகத்தில் அதிக அளவில் கொலை கொள்ளை குற்றங்கள் அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அதிகரித்து வந்தது. பல்வேறு தரப்பு விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்த தமிழக அரசு காவல்துறையின் மூலம் தற்பொழுது கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் நவம்பர் 6ஆம் தேதி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் தமிழக முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்த உள்ளனர். இந்த பேரணியின் போது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உரத்துறை தமிழக அரசுக்கு எரிச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் முக்கிய நிர்வாகிகள் இருக்கும் மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளை சேர்ந்த நான்கு நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சேலம் அடுத்த ஓமலூர் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்திலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன் காரணமாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலைதூக்கும் சூழல் ஏற்பட்டதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில காவல் துறைக்கு அனைத்து தரப்பட்ட ரவுடிகள் மற்றும் தாதாக்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் தமிழக காவல்துறையினர் ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் கடந்த 72 மணி நேரத்தில் 3,095 ரவுடிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, அரிவாள், பட்டாகத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 489 பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்தவர்கள் ஆவர், 216 பேர் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள். மீதமுள்ள 2390 இப்ப ரவுடிகள் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நன்னடத்தை ஜாமீன் பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதை மீறி அசம்பாவிதங்களிலோ குற்ற செயல்களில் ஈடுபட்டால் 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.