கோவை: சாலை பாதுகாப்பு வாரம் 11-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி 3-ம் நாளான இன்று கோவையில் மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார், ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர்கள் மற்றும் உயிர் அமைப்பினர் பங்கேற்றனர். சாலை பாதுகாப்பு ...

கோவை: பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதைடுத்து கோவை கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் டன் கணக்கில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆர்.எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியில் ...

கோவை: சட்டசபை மரபை மீறி செயல்பட்ட கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்தும் ,அவர் பதவி விலக கோரியும் கோவை நீதிமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணியை சேர்ந்த முற்போக்கு கூட்டணி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் கவர்னருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் மூத்த வழக்கறிஞர்கள் அருள்மொழி ...

மதுரை: மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை பகலில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி வரும் ஏப்ரல் 1 முதல் இரவிலும் விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் ...

தமிழ்நாட்டில் 21 காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்றப்பதிவுப் பணியக காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா நியமனம் ...

இந்தியாவின் மொத்த நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 24.58 சதவீதம் வரையில் உயர்ந்து 14.71 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இந்திய அரசின் நேரடி வரி வசூலில் ஏற்பட்ட தடாலடி உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணமாகத் தனிநபர் வருமான வரி அதிகரிப்பு பெரும் பங்கு வகித்துள்ளது ...

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். திருவாரூரில் சோலார் பூங்கா உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சோலார் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வழக்கமான மின்சாரத்திற்கு மாற்றாக, மின் உற்பத்தி செய்வதில் ஒட்டுமொத்த நாட்டிற்கே ...

உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை விமான நிலையம், 13வது இடத்தை பிடித்துள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், கோவை ...

சென்னை: தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மேலும் 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஓசூர், வேலூர் நகரங்களில் இன்று முதல் மக்கள் விரைவான 5ஜி சேவையை பெற முடியும். இந்த புதிய 5ஜி சேவையை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி ...

சென்னை:”இந்தியா — ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்; கூடுதலாக, 81 ஆயிரத்து, 710 கோடி ரூபாய் ஏற்றுமதி வாய்ப்பும் கிடைக்கும்,” என, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலர் பாலாஜி தெரிவித்தார். இந்தியா — ஆஸ்திரேலியா பொருளாதார கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ...