கோவை: மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர், ...

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது. காய்கறி, பழவகைகள், பூக்கள், உணவு வகைகள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல வகையான சரக்குகள் கோவையில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ...

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை, மருதூர், திம்மம்பாளையம், கண்டியுர், வெள்ளியங்காடு, தோலம்பாளைம், தேக்கம்பட்டி ஆதிமாதையனூர், கணுவாய்ப்பாளையம், இடுகம்பாளையம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம், தோலம்பாளைம் உள்ளிட்ட பகுதியில் கத்தரி, வெண்டை, பாவக்காய், சுரக்காய், தக்காளி, சின்னவெங்காயம், அவரை உள்ளிட்ட காய்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் தக்காளியை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இதனிடையே மேட்டுப்பாளையம், காரமடை, ...

ட்விட்டரில் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் அளவு 280-இல் இருந்து 4 ஆயிரமாக அதிகரிக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். ட்விட்டரில், ட்விட் செய்வதற்கான அளவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்து இருந்தார். அதில், ஆம் என்று குறிப்பிட்டு இருந்தார். 2017 வாக்கில் ட்விட் அளவை 280 ஆக அதிகரிக்கும் முன் ...

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகையில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 3% மஞ்சள் பாஸ்பரஸ்ஸை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த ...

நீலகிரியில் நீராவி மலை ரயிலை வாடகை கொடுத்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 15 சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். நீலகிரி: மலை ரயிலை தனியார் வாடகைக்கு அமர்த்தி பயணம் செய்ய தென்னக ரயில்வே நிர்வாகம் மூன்றாண்டுகளுக்கு முன்பு அனுமதி அளித்தது. இதனைத் தாெடர்ந்து பல்வேறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணிக்க ...

கோவை : கோவை  மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அறக்கட்டளை சார்பில் காவல்துறை குடும்பத்தை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.இதில் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் 25 பேருக்கு தலா ரூ 15 ஆயிரம் உதவி தொகை ...

கோவை தெற்கு உக்கடம், ஜி. எம். நகரை சேர்ந்தவர் குஞ்சி மூசா (வயது 50) இவர் கோவை வெரைட்டிஹால் ரோடு – என்.எச். ரோடு சந்திப்பில் இந்தியன் அத்தர் ஸ்டோர் என்ற பெயரில் வாசனை திரவியம் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் இவரது கடையில் திடீரென்று ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் இருக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக ...

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த அக்டோபர் 27-ம் தேதி எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு ...