பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் டோக்கன்: தி.மு.க கட்சியினர் கொடுப்பதாக புகார் – கோவையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள் செல்போன் காட்சிகள் வைரல்

பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் டோக்கன்: தி.மு.க கட்சியினர் கொடுப்பதாக புகார் – கோவையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள் செல்போன் காட்சிகள் வைரல்

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 1000, கரும்பு, அரிசி, மண்டவெல்லம் போன்ற பொருள்கள் ரேஷன் கடையில் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் அதற்கான டோக்கன்கள் வினியோகம் செய்வதற்கு நேற்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் ஒரு சில கடைகளில் டோக்கன்களை தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் வாங்கிக் கொண்டு அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வீடு, வீடு சென்று விநியோகிப்பதாகவும், மற்ற கட்சியைச் சார்ந்தவர்களுக்கு மற்றும் அவர்களுக்கு வாக்களிக்கு அளிக்காத பொது மக்களுக்கு வழங்குவதில்லை என பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று கோவை வீரகேரளம், பொன்னையா ராஜாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் டோக்கன்களை ஆளுங்கட்சிக்கு கொடுத்த அரசு ஊழியர்கள் இதனால் அப்பகுதி மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் செல்போன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.