கடனுக்கான ரெப்போ ரேட் 50 புள்ளிகள் உயர்வு- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அதிரடி அறிவிப்பு.!!
நாட்டின் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுவருவதையடுத்து, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அதிரடியாக அறிவித்தார். உணவுப்பொருட்கள், காய்கறிகள் விலை, பெட்ரோல்,டீசல் விலை இன்னும் குறையாததையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேலும் 50 புள்ளிகள் வரை வட்டி உயர்ந்துள்ளது. இதனால், தற்போது கடனுக்கான ரெப்போ ரேட் ...
2024 ஆம் வருடம் முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர் களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வெவ்வேறு விதமான சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர்களை வாங்க வேண்டி இருக்கின்றது. இதனால் ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும் செல்போன், டேப்கள், ...
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள தமிழக அரசு, ...
டெல்லி: ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை இரட்டிப்பாக்க இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்குலக நாடுகள், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய ...
சென்னை : சென்னையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும் எழுந்துள்ள புகாரில் காலை 6.30 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தனியார் ஸ்கேன் மையத்தின் கிளைகள் சென்னையில் உள்ள வேளச்சேரி, ...
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் இன்று (7.6.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் ...
கோவை: கோவையில் கொடிசியா சார்பில் நடைபெற்ற ‘இன்டெக் 2022’ சர்வதேச இயந்திர மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சியில் எதிர்பார்ப்பை விட அதிகமாக ரூ.1200 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு தெரிவித்தார். கோவை கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஜப்பான், ...
குஜராத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் எலெக்ட்ரிக் டிராக்டரை கண்டுபிடித்து உருவாக்கி அசத்தியுள்ளார். இந்தியா ஒரு விவசாய நாடு மட்டுமல்ல, தங்களுக்குத் தேவையான கருவிகளை, புதிய விதைகளை தானே உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஏராளமான விவசாயிகளையும் கொண்டுள்ளது. என்ன தான் வேளாண் துறையில் தொழில்நுட்பம் விரைவான வளர்ச்சியை எட்டி வந்தாலும், விவசாயிகள் தங்களது குறைந்தபட்ச கல்வி அறிவு அல்லது ...
இந்தாண்டு இறுதிக்குள் பேருந்துகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தமிழகத்தில் பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ-டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இ-டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஜிபே உள்ளிட்ட முறைகளில் பணம் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக ...
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வு தொடர்ந்து மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்திவரும் சூழலில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் மிச்சமாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து வாகன பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் விஷயத்தில் நாம் பெரும்பான்மையாக இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பதால் பெருமளவிலான அந்நிய செலாவணி ...