ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. மத்திய அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை..!!.

ஜூலை 1 முதல் இந்தியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை உள்ளது. தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, காடுகளை அழித்தது, நீர் நிலைகளை அழித்தது போன்றவற்றின் விளைவாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.. இதன் காரணமாக விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் முன்னெடுத்து வருகின்றன..

இந்நிலையில் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு முக்கியமான காரணமாக இருக்கும் சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் ( ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி) பொருட்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை 1, 2022 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தியாவில் இந்த வகை நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப் பயன்பாடு என அனைத்திற்குமே தடை விதிக்ப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது..

இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து மீண்டும் எச்சரித்துள்ளது.. அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை, கையிருப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய தடையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது…. ஒரு முறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் தவிர, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்டிரா, ஸ்பூன், ரேப்பர், காட்டன் பட்ஸ் போன்றவை இந்த தடையில் அடங்கும்.

ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வரும் உத்தரவுக்கு முன்னதாக, மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வணிகர்கள், சிறு கடைகள், சினிமா அரங்குகளில் உள்ள விற்பனைக் கூடங்கள் என அனைத்து வணிகர்களும் அதன் இருப்பை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு மேற்கண்ட பொருட்களை கையிருப்பு வைத்திருந்தாலோ அல்லது விநியோகம் செய்தாலோ சோதனையின்போது பிடிபட்டால், பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் சீல் வைக்கப்பட்டு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இயர்பட்கள், பலூன்கள் மற்றும் மிட்டாய் ஐஸ்கிரீம்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடையில் அடங்கும். தட்டுகள், கண்ணாடிகள், முட்கரண்டிகள், கரண்டிகள், தட்டுகள், கத்திகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள், அழைப்பிதழ் அட்டைகள், இனிப்புப் பெட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் மற்றும் ரேப்பிங் பிலிம்களுக்கும் தடை விதிக்கப்படும்.

ஐநா சுற்றுச்சூழல் படி, பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படாவிட்டால் சிதைவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். இது மிகவும் தீப்பற்றக்கூடிய பொருளாகும், இது தேவையானதை விட வேகமாக குப்பைகளை நிரப்புகிறது. நிலத்தடியில் உள்ள பிளாஸ்டிக்கின் சிறு துண்டுகள் பெரும்பாலும் புற்றுநோயை உண்டாக்கும் உலோகங்களை நிலத்தடி நீரில் கலந்து விடுகின்றன. குப்பை கிடங்குகள் தற்செயலாக தீப்பிடிக்கும் போது, ​​எரியும் பிளாஸ்டிக், நச்சு வாயுக்களை சுற்றுச்சூழலில் வெளியிடுகிறது. அடுத்து, அது கடலுக்குள் சென்று கடல் விலங்குகளின் காற்றுப்பாதைகளை அடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.-