கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டுவரை அமாலக்கப்பிரிவு ரெய்டு 112 ஆக இருந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்து, 3,010 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி அமலாக்கப்பிரிவு ரெய்டு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.அதில் ” அமலாக்கப்பிரிவு ரெய்டு கடந்த 2014ம் ...

கோவையில் மாவட்டத்தில் பஸ் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கபட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து செல்போன்களை தவறவிட்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ...

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையில் சீதோஷன நிலைக்கு ஏற்ப சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இது 60 நா பயிராக உள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத காலமாக விவசாயிகள் அதிக ...

மது போதையில் இருந்த ஓட்டுநரை சட்டையை கிழித்து அடித்து விரட்டிய லாரி உரிமையாளர் – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல், மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து ...

அப்பார்ட்மெண்ட்டில் அழகிகள் இருப்பதாக கூறி பணம் மோசடி: சிறுவன் உட்பட இருவர் கைது கோவை சவுரிபாளையத்தில் தனியார் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு உள்ளது. இங்கு காவலாளியிடம், சில வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டனர். அதை பார்த்த காவலாளி, அது போல் யாரும் இங்கு குடியிருக்க ...

டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளை செயல்படுத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதி செய்யும் ஆலோசனைகளை வழங்கக் கூடியது. டெல்லியில் காவிரி ஆணையத்தின் 16-வது ...

பத்திரிகையாளர் நல நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ...

சென்னை: ஊழல் புகாரில் சிக்கிய நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் உள்ளது. இங்கு துறை சார்ந்த பிற அலுவலகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து துறை துணை ஆணையராக நடராஜன் ...

ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ...

சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் ...