பேரூர் கோவிலில் வசூல் வேட்டை: அதிர்ச்சியில் பக்தர்கள்

பேரூர் கோவிலில் வசூல் வேட்டை: அதிர்ச்சியில் பக்தர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பல்வேறு அரசில் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி அமாவாசையினை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்ந பக்தர்களிடம் வாகனம் நிறுத்தும் இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் அதிக கட்டணம் வசூல் செய்த சம்பவம் நடந்தது. இந்நிலையில் இன்று ஆடி 18 என்பதால் மீண்டும் வாகன நிறுத்தும் இடம், வீட்டிற்கு முன் வைத்துள் பூ கடை, பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் நபர்களிடமும் வசூல் வேட்டையில் பேரூராட்சி ஈடுபட்டுள்ளது. மேலும் பேரூர் படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்ந பக்தர்களிடம் பூஜை செய்வதற்க்கு கட்டணம் நிர்ணயம் செய்யாமல் அவர்களுக்கு வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தாமல் கோவில் உண்டியல், சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் இதர வருமானத்தில் மட்டும் குறியாக உள்ளனர் என்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது