கோவை மாவட்டம் வால்பாறையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அரியர் தொகை வழங்க தொழிற்சங்கத்தினர் ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்தினரை வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டமும் அறிவித்திருந்தனர் இந்நிலையில் ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்தினர் மறியல் போராட்டம் அறிவித்த எம்ஜிஆர் தோட்டத்தொழிலாளர் சங்கம், ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஆனைமலை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து சுமூக தீர்வு காணப்பட்டது இந்நிலையில் ஒப்பந்தத்தின் படி நிலுவையில் உள்ள சம்பளத்தொகையில் தற்போது 01.09.2021 முதல் 31.12.2021 வரை தற்போது நான்கு மாதங்களுக்கு இந்த மாதம் 10 ஆம் தேதிக்குள் தொழிலாளர்களுக்கு வழங்கவும் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து தொழிற்சங்கத்தினர் செய்துள்ள இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே 6 தொழிற்சங்கத்தினர் ஒப்புதல் கடிதம் அளித்துள்ள நிலையில் ஒப்புதல் கடிதத்தைதோட்ட அதிபர் சங்கத்தினரிடம் வழங்கியுள்ளதாகவும் இந்நிலையில் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் மூலம் சுமார் 23 கோடியே ஐம்பது லட்சம் வழங்கும் பணி நேற்று முன் தினம் முதல் தோட்ட நிறுவனங்களின் மேற்ப்பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் இதன்படி ஒரு மாதத்தில் 26 நாட்கள் பணி செய்திருக்கும் ஒரு தொழிலாளிக்கு சுமார் 5 ஆயிரத்து 200 ரூபாயாகவும் கணவன் மனைவி இருவருக்கும் சுமார் 10 ஆயிரத்து 400 ரூபாய் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் ஒப்பந்த காலம் முதல் பணி செய்திருந்தால் சுமார் 16 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட க்கழகத்தை விட கூடுதலாக தனியார் தோட்டத்தொழிலாளர்கள் பெற்று பயனடைவார்கள் என்றும் மேலும் ஒப்பந்த காலத்திலிருந்து பணி மூப்பின் அடிப்படையில் ஓய்வு பெறும் ஒரு தொழிலாளிக்கு சுமார் 45 ஆயிரத்திலிருந்து 52 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என்றும் இதய தெய்வம் எம்ஜிஆர் தோட்டத்தொழிலாளர் சங்கத்தலைவரும் தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவருமான வால்பாறை வீ.அமீது தகவல் தெரிவித்துள்ளார்