கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள 1,192 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ...

கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது. அப்பொழுது அங்கு வந்த சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் ...

கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி கோவையின் புறநகர் பகுதியான நல்லூர்வயல் காருண்யா அருகே உள்ள சப்பானிமடை கிராமத்தில் சிறு துளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து பெருமாள் கோயில் பதி பண்ணை தோட்டத்திற்கு 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் ...

கோவையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது: சுமார் 350 கிலோ குட்கா பொருட்கள், கார் பறிமுதல் கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர். ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜ் நகரில் வசிப்பவர் பழனி ராஜா (வயது 31) கூலித் தொழிலாளி.இவர் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் அனுசியா ( வயது 35) வீட்டில் வசித்து வந்தார் .அக்காள் கணவரான கனகரத்தினம் ( வயது 45) அடிக்கடி குடித்துவிட்டு அனுசியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை பழனி ராஜா ...

கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் அனிதா (வயது 40) கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.செல்வகுமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனால் அனிதா தனது 2குழந்தைகளுடன்குனியமுத்தூர் மின் நகரில் வசித்து வந்தார். ...

கோவை குறிச்சி அருகே உள்ள மாச்சம் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ பள்ளிக்கூட வகுப்பறையின் பூட்டை உடைந்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், சிபியூ -யூ.பி.எஸ். ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கவிதா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் ...

கோவை பொள்ளாச்சி மாவட்டம் அருகே சூளேஸ்வரன்பட்டியில் கடந்த 9-ந்தேதி சிக்கந்தர் என்பவர், வீட்டை பூட்டி விட்டு கோட்டூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ...

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி பாரதி விதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி செல்வரத்தினம் ( வயது 75) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள நீதிமன்றத்திற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சில் வைத்து இவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். அவர் செல்வ ரத்தினத்துக்கு உதவி புரிவது ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா ,சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று இரவு காட்டூர் சோமசுந்தரம் மில் ‘ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா 346 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் ...