நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ...

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் நடைபெற்ற அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து கடந்த 25ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 9 மீனவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் . அவர்களை விடுவிக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ...

மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது.நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத் தொடக்கத்திலேயே மக்களவையில் அமளி எழுந்தது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானம் மீது மக்களவையில் இன்று பகல் 12 மணிக்கு விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில், கௌரவ் கோகோய் (அசாம்) விவாதத்தைத் தொடங்கி ...

அமலாக்கத்துறைக்கு நேற்று இரவு செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது. இதையடுத்து நேற்று அவரை அலுவலகத்திற்கு இரவோடு இரவாக கொண்டு சென்றனர். மெலிந்த தேகத்துடன், செந்தில் பாலாஜி முகம் முழுக்க தாடியுடன் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று இரவு கிட்டத்தட்ட 9 மணிக்கே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுவிட்டார். அமலாக்கத்துறைக்கு சில மணி நேரம் ...

கோவை அருகே உள்ள பிஎன் புதூர், மும்பை நாயக்கர் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 59) இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார் .அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது .உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் ...

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 39) இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தாராம். இவரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 12 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர்,பேச்சிமுத்து பிள்ளை வீதியை சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகன் கதிர்வேல் (வயது 26) இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் விட்டத்தில் துண்டை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து ...

கோவை பீளமேடு புதூர் ,திருமகள் நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 58 )இவர் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் பெங்களூரு சென்று விட்டார்.நேற்று திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த பின் கதவு உடைக்கப்பட்டு ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பு,சக்தி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 48) இவர் நேற்று தனது மகன் ஹேமலதா ( வயது 18 ) என்பருடன் பைக்கில் மேட்டுப்பாளையம் -சக்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஆலங்கொம்பு பஞ்சாயத்து அலுவலகம் முன் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் ...