விஸ்வரூபம் எடுத்தது நம்பிக்கையில்லா தீர்மானம்…பாஜக எம்பிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சரிவர நடைபெற முடியாமல் முடங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர் எதிர்க்கட்சிகள். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு வர உள்ள நிலையில், பாஜக எம்பிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்..