செந்தில்பாலாஜியை கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறை..!

அமலாக்கத்துறைக்கு நேற்று இரவு செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது. இதையடுத்து நேற்று அவரை அலுவலகத்திற்கு இரவோடு இரவாக கொண்டு சென்றனர். மெலிந்த தேகத்துடன், செந்தில் பாலாஜி முகம் முழுக்க தாடியுடன் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்று இரவு கிட்டத்தட்ட 9 மணிக்கே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுவிட்டார். அமலாக்கத்துறைக்கு சில மணி நேரம் நேற்று இருந்தும் கூட அவரிடம் விசாரணை எதையும் செய்யவில்லை. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உணவு வழங்கப்பட்டது.

அதன்பின் அவரை தூங்குவதற்கு அனுமதித்தனர். நேற்று செந்தில் பாலாஜியை விசாரிக்காமல் அமலாக்கத்துறை விட்டுப்பிடித்ததற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அதன்படி செந்தில் பாலாஜியை சட்டப்படி ஆகஸ்ட் 8- 12ம் தேதி வரை மட்டுமே விசாரிக்க முடியும். இதனால் நேற்று அவரிடம் அமலாக்கத்துறை கேள்விகளை கேட்கவில்லை.

அதோடு செந்தில் பாலாஜி உடல்நிலையை கவனித்துக்கொள்வோம் என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது. அதனால் அவரை நேற்று விசாரிக்காமல் மருத்துவ பரிசோதனைக்கு பின் உறங்க அனுமதித்து உள்ளனர். இதையடுத்து இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை தொடங்கி உள்ளது. புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜியிடம் நேற்று இரவு கேள்விகள் எதுவும் கேட்கப்படாத நிலையில் காலையில் விசாரணை தொடங்கியது. அவரிடம் இன்று 50 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.