தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். கடைசியாக வெளியான தர்பார், மற்றும் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், ரஜினி அடுத்ததாக இயக்குனர் ...
சண்டிகர்: பஞ்சாபில் பல முறை எம்எல்ஏ.,வாக இருந்தவர்களுக்கு இனி ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான பென்சனை (ஓய்வூதியம்) மட்டுமே வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அக்கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் வெளியிட்ட ...
சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும்பாலான நாடுகள் டாலர் வாயிலாகவே அனைத்து வர்த்தகத்திற்காகப் பணப் பரிமாற்றங்களைச் செய்யும் காரணத்தால், உலக நாடுகள் மத்தியில் டாலருக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அமெரிக்கா டாலருக்கு மாற்றாக வேகமாக வளர்ந்து வந்த கிரிப்டோ கரன்சியை ஆதரிக்காமல் தொடர்ந்து ஒதுக்கி வந்தது. ...
மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.3.2022) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல் மர்ரியையும், (H.E. Abdulla Bin ...
கீவ்: உக்ரைன் மீதான போரை மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்யா தரப்பில் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. இதை உக்ரைன் ராணுவத்தின் உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி 24ல் துவங்கியது. ...
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடன் சென்றிருப்பவர்கள் துபாயில் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூகுள் மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு நன்கு தெரியும் என்றும், ஸ்டாலின் துபாய் விவரம் குறித்த அனைத்து பைல்களையும் ஆளுநர் ...
கனவு கண்டுவிட்டால் போதும். அது நம்மை எடுத்துக்கொள்ளும் இல்லையா.! பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சுஜாதாவுக்கு ஒரு கனவு இருந்தது. இது உண்மையிலேயே கனவு லட்சியம்தான் என்று சொல்லும் அளவுக்கான கனவு அது. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை நீந்திச்செல்வது. இதோடு நிற்கவில்லை சுஜாதா. மீண்டும் கையோடு தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி ...
உக்ரைனில் பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சம் அடைந்த திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 300 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை ...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ், சையான், ...
பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில் கட்டும்படி எந்த ஒரு கடவுளும் கேட்பதில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கடவுளே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதனை அகற்றுவதற்கு உத்தரவிடப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அருள்மிகு பாலபட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சார்பாக பொதுப் பாதையை ...












