வாஷிங்டன்: அமெரிக்காவில் வெடிகுண்டு (BOMB) பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் அந்நாடு முடங்கி உள்ளது. மொத்தம் 18 லட்சம் வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் தினத்திலும் வீடுகளில் அதுவும் இருளில் மூழ்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை போல் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட வளர்ந்த நாடுகளில் ...
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகிறார்’, என அக்கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வாஜ்பாயின் உருவப்படத்துக்கு தமிழக பா.ஜ.க. ...
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மேம்பாட்டுக்காக ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னதாக வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ...
புதுடெல்லி: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார். மத்திய அறிவியல், தொழில் துறையின் கீழ் சிஎஸ்ஐஆர் அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஹைதராபாத்தில் உள்ள உயிர்மம், ...
சீனாவில் கோவிட் அலை இரண்டு மில்லியன் மக்களை கொல்லக்கூடும் என நிபுணர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். சீனாவில் கடந்த 7ஆம் தேதி அன்று கட்டுப்பாடுகள் வியத்தகு முறையில் தளர்த்தப்பட்டது. தேசிய கோவிட் – 19 அலையுடன் சீனா போராடி வருவதால், நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அவசரகால வார்டுகள் அதிகமாகி வருகின்றன. டிசம்பரின் ...
2023ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வையை இந்தியா ஈர்க்கக்கூடும், அதே போல் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் மற்றும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியின் முன்கணிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் பணவியல் கொள்கை இறுக்கம் காரணமாக உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் இருந்தாலும், உக்ரைன் போர் கவலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் ...
கார் குண்டு வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட நபர்களை பல்வேறு இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரணை. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ...
கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டை திருடி செல்லும் நபரின் சி.சி.டி.வி காட்சிகள்…. கோவை சாய்பாபாகாலனி பகுதியில் இரு வாகனம் ஒன்றின் மேல் அதன் உரிமையாளர் அவரது ஹெல்மெட்டை வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். பின்னர் அலுவலக வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கையில் ஹெல்மெட் காணாமல் போயுள்ளது. சிறிது நேரம் அக்கம், பக்கத்தில் ...
சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 9-வது நாளான நேற்று டெல்லியில் விவசாயி சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தில் பிரபலமான பஞ்சாப்பை சேர்ந்த கோல்டன்சிங் என்கின்ற ராஜேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது விவசாய பொதுமக்கள் சமைத்து வைத்திருந்த உணவை அவர்களோடு அமர்ந்து ...
கோவை: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நள்ளிரவு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தங்கள் வீடுகளிலும், தேவாலயங்களிலும் ஸ்டார், குடில்கள் அமைத்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வெகுசிறப்பாக கொண்டாடுவார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை, கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி கொண்டாடினர். தற்போது ...













