அமெரிக்காவை வாட்டி வதைக்கும் பயங்கரமான Bomb பனிபுயல்… மக்கள் கடும் அவதி… 18 லட்சம் வீடுகளில் மின்தடை..!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெடிகுண்டு (BOMB) பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் அந்நாடு முடங்கி உள்ளது.

மொத்தம் 18 லட்சம் வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் தினத்திலும் வீடுகளில் அதுவும் இருளில் மூழ்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை போல் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட வளர்ந்த நாடுகளில் தற்போது பனிக்காலமாகும். இந்தியாவை ஒப்பிடும்போது அமெரிக்காவில் பனியின் தாக்கம் மிகமிக அதிகமாக இருக்கும். இரவு மற்றும் மாலை நேரங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு செல்வதும் உண்டும்.

இந்நிலையில் தான் தற்போது அமெரிக்கா மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வந்துள்ளது. அந்த நாட்டில் வழக்கத்துக்கு மாறாக பனிப்புயல் தொடர்ந்து வீசி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் ஓஹியோ, சிகாகோ, டெக்சாஸ், நியூயார்க் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அதிகப்படியான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சில இடங்களில் பனிபுயல்கள் வீசி உள்ளன. மேலும் தொடர்ந்து உறைபனி நிலவுகிறது. இயல்பாக டிசம்பர் மாதத்தில் குளிர் கடுமையாக இருக்கும் நிலையில் பனிப்புயல், உறைபனி ஆகியவை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது. இந்நிலையில் தான் Bomb பனிப்புயல் தொடர்ந்து அமெரிக்காவை தாக்கின.

மேலும் அமெரிக்காவில் உள்ள மைனி(Maine) பகுதியில் இருந்து சியாட் வரை ஏராளமான வசிக்கும் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். Poweroutage.us இணையதளத்தின் தகவலின்படி நேற்று காலை வரை அமெரிக்காவில் வீடு, வணிக நிறுவனங்கள் என மொத்தம் 1.8 மில்லியன் (18 லட்சம்) கட்டங்கள் மின்தடையை சந்தித்தனர். இதையடுத்து மின்ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு பல இடங்களில் பிரச்சனையை சரிசெய்துள்னளர்.

இதுபற்றி பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்ட பிஜேஎம் இன்டர்கனெக்சன் சார்பில், ”13 மாநிலங்களில் மின்சாரத்தை சேமித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. டென்னசி வேலி எனும் மின்வினியோக ஆணையம் டென்னசி உள்பட 6 மாநிலங்களுக்கு 1 கோடி பேருக்கு மின்வினியோகம் செய்கிறது. இங்கு திட்டமிட்ட வினியோகத்தை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நியூ இங்கிலாந்து மாநிலங்களில் 2 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மின்சாரமின்றி தவித்தனர். வட கரோலினாவில் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவித்த நிலையில் தற்போது 1,69,000 கோடி மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்தடையால் பல இடங்களில் மின்சார துண்டிப்பால் கிறிஸ்துமஸ் தினத்திலும் இரவில் வாழ வேண்டிய நிலைக்கு பல லட்சம் மக்கள் தள்ளப்பட்டனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டிய நிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை 2 ஆண்டுக்கு பிறகு வெகுவிமரிசையாக கொண்டாட நினைத்த மக்களின் முயற்சி கைவிடவில்லை.

மேலும் இந்த புயல் வேளையில் சாலை விபத்து, மரம் விழுந்து ஏற்பட்ட பலி என மொத்தம் 18 பேர் இறந்துள்ளனர். பல இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தொடர்ந்து வாகனங்கள் ஒன்றொடொன்று மோதி சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலைகள் பணி படர்ந்து வெள்ளையாக உள்ளன. இதுமட்டுமின்றி பனிபுயலால் ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் சேதமடைந்துள்ளன. அதோடு அமெரிக்காவின் பல இடங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 2,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6,400 விமானங்கள் காலதாமத்துடன் இயக்கப்பட்டுள்ளது