சூலூரில் 10-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..!

சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் 9-வது நாளான நேற்று டெல்லியில் விவசாயி சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தில் பிரபலமான பஞ்சாப்பை சேர்ந்த கோல்டன்சிங் என்கின்ற ராஜேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது விவசாய பொதுமக்கள் சமைத்து வைத்திருந்த உணவை அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டவாறே கலந்துரையாடினார்.

அதை தொடர்ந்து விவசாயிகளிடம் பேசுகையில், தங்களது நியாயமான போராட்ட த்திற்கு அகில இந்திய கிசான் துணை நிற்கும் எனவும் போராட்டம் வெற்றி பெற வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் எங்களது சங்கத்தைச் சேர்ந்தவர்களை வட மாநிலங்களில் இருந்து அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசு இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு என நிலங்களை கைப்பற்றி அதை அதிக விலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதை விவசாயிகள் வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற விவசாய நிலங்களை கையகபடுத்துவதற்கு அரசு முனைப்பு காட்டக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இன்று விவசாயிகள் தொடர்ந்து 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.