கோவை: கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக தொழில் நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து கோவை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:- ...
கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை – மங்களூர் விரைவு ரயில் ( எண்:16159) இன்று முதல் ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன் இயக்கப்படும். காரைக்கால் – எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: ...
கோவை: வெளிநாட்டில் இருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:- கொரோனா தொற்று மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் ...
கோவை : பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரான கண்ணுச்சாமி என்பவரது மகள் நர்மதா 7-வது வார்டில் போட்டியிட்டு 611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று அவர் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் அவர், சொந்த காரணங்களுக்காக தன்னால் ...
கோவை துடியலூர் அடுத்த செங்காளிப்பாளையம் அருகே காந்தி காலனி உள்ளது. அங்கு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கட்சி கொடி கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் பா.ஜ.க.வின் கொடி கம்பம் அமைக்க அந்த பகுதியை சேர்ந்த கட்சியினர் முடிவு செய்தனர். இதையடுத்து கொடி கம்பம் அமைப்பதற்கான பணிகளை செய்து வந்தனர். அப்போது ஏ.டி ...
கோவை, தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ...
கோவை அருகே உள்ள வேடப்பட்டி, பெருமாள் நாயுடு லேஅவுட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 62) சமையல் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள நரசாம்பதி குளம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று கால் தவறி குளத்துக்குள் விழுந்தார். நீரில் மூழ்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசில் ...
திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 47) விவசாயி. இவர் நேற்று பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் தனது புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .சுந்தர கவுண்டனூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...
மேட்டுப்பாளையம் மட்டக்கார வீதியை சேர்ந்தவர் சலீம் என்கிற சதீஷ் (வயது 35). இவர் அன்னூர் ரோடு பகுதியில் உள்ள காய்கறி மைதானத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது நண்பரின் மொபட்டை எடுத்துக் கொண்டு சதீஷ் வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் வெளியே மொபட்டை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். ...
கோவை அருகில் உள்ள நீலாம்பூர், அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 73) இவர் நேற்று கோவை- அவிநாசி ரோட்டில் தனது மனைவி நல்லம்மாளுடன் ( வயது 60) மொபட்டில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பீளமேடு தனியார் கல்லூரி அருகே சென்ற போது பின்னால் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் ...












