கோவை தேவாலயங்களில் இன்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடு..!

கோவை: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நள்ளிரவு கொண்டாடப்படுகிறது.

 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தங்கள் வீடுகளிலும், தேவாலயங்களிலும் ஸ்டார், குடில்கள் அமைத்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வெகுசிறப்பாக கொண்டாடுவார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை, கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி கொண்டாடினர். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கட்டுபாடுகள் இல்லாமல் கொண்டாடப்படுகிறது.

கோவை பெரியக்கடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இன்று இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் வழி பாட்டு பாடல் பாடப்படுகிறது. இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்குமேடையில் இருந்து குழந்தை ஏசுவை குடிலில் கொண்டு சென்று வைக்கும் நிகழ்வு நடக்கிறது. பின்னர் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது.

புலியகுளம் புனித அந் தோணியர் ஆலயம், புனித பாத்திமா அன்னை தேவாலயம், ரத்தினபுரி புனித சின்னப்பர் தேவாலயம், புரூக்பாண்ட் சாலையில் உள்ள சிரியன் சர்ச், அத்திப்பாளையம் புனித பிரான்சிஸ் அசிசி யார் ஆலயம், கோவைப்புதூர் புனித ஏயேசு ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

மேலும், திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், இம்மானுவேல் ஆலயம், ஆல்சோல்ஸ் சர்ச், காந் திபுரம், மதுக்கரை, பட் டணம், கோவைப்புதூர், மலுமிச்சம்பட்டி, பேரூர், ஆலாந்துறை, போத்தனூர், ஒண்டிப்புதூர் ,சுந்தராபுரம் கிறிஸ்துநாதர் ஆலயம் உள் ளிட்ட அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் நாளை (25-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.