பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமோதரதாஸ் மோடி. இவர் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை உள்ளிட்ட கோவில்களுக்கும் ...

புதுடெல்லி : மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள ‘முகல் கார்டன்’ அண்மையில்தான் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றப்பட்டது. ஆனால் நம் நாட்டில் உள்ள பழமையான, ...

சென்னை: இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய திட்டமாக நான் முதல்வன் திட்டம் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினேன். நான் முதல்வன் திட்டத்தை கடந்த மார்ச் 1ம் ...

கோவை இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி வேலம்மாள்(வயது60). இவர்களுக்கு மணிகண்டன்(23) என்ற மகனும், தங்கமாரி, செல்வி என 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தங்கமாரி தனது கணவர் அய்யப்பனுடன் வேலாண்டிபாளையம் சின்ன அண்ணன் செட்டியார் வீதியிலும், செல்வி தனது கணவர் பாலசுப்பிரமணியத்துடன் இடையர்பாளையத்திலும் வசித்து வருகின்றனர். ...

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் மோதூர் பெத்திக்குட்டை காப்புகாடு வனப்பகுதிக்குள் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இதனை பார்த்து வன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வன ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ,சித்தன் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) டிரைவர். இவர் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள பாறைப்புதுரை சேர்ந்த அஜித்குமார் ( வயது 26)என்பவருடன் பைக்கில் இரும்பொறை – பெத்திக்குட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சோலார் கம்பெனி அருகில் சென்ற போது ...

கோவை தெற்கு உக்கடம், பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி .இவரது மனைவி செண்பகவல்லி ( வயது 60)இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாய் அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற அஜித் குமார் (வயது 26) என்பவரை பார்த்ததும் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ...

கோவை போலீஸ் பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு அருகே மாநகர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அடையாளம் காணப்படாத 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரவில் இதில் ஒரு வாகனத்தில் திடீரென்று தீப் பிடித்தது. தீ மள, மளவென பரவியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 69 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக ...

கோவை பீளமேடு,மாசாத்தி வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41) நியூ சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோட்டில் பேஷன் துணிக்கடை நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பேண்ட் , சட்டைகள், ...

கோவை : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா. (வயது 30) இவரிடம் கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் சுஜாதா மதுமோகன், ரவி, ராஜேஸ்வரி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் அவர்கள் மூலம் ராணுவத்தில் வேலைக்கு சேர்த்து விடலாம் என்று கூறினார்கள். இதை ...