தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தலங்கள் குவிந்து வருகின்றனர்.அந்த வகையில், கன்னியாகுமரியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். தற்போது, கோடை விடுமுறையுடன் சேர்த்து சித்திரை மாத பௌர்ணமி நிகழ்வு வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து, சந்திரன் உதயமாகும் அரிய காட்சி நிகழ உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை ( மே 1) சித்ரா பௌர்ணமி நிகழ்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரியில் மாலை சரியாக 6 மணி அளவில் மேற்கு பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் சூரியன் வந்து போன்ற வடிவத்தில் கடலின் உள்ளே மறையும். அதே நேரத்தில் கிழக்கில் உள்ள வங்க கடல் பகுதியில் சந்திரன் வட்ட வடிவத்தில் ஒளி வெளிச்சத்தில் உதயமாகும். இந்த நிகழ்வு கன்னியாகுமரியில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த நிகழ்வை பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிவது வழக்கம் ஆகும். அதன்படி, கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி, முருகன் குன்றம், சன் செட் பாயிண்ட் ஆகிய பகுதிகளில் இந்த அரிய நிகழ்வை கண்டு ரசிக்கலாம். ஆண்டுதோறும் நிகழும் இந்த அரிய நிகழ்வை உள்ளூர் சுற்றுலா பயணிகள் மற்றும் இன்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பார்ப்பதற்காக வருகை தருவார்கள். இதன் காரணமாக கன்னியாகுமரி திருவேணி சங்கத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். இதனால், அங்கு அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படாமல் வகையில் தடுப்பதற்காக மாவட்ட போலீசார் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது கன்னியாகுமரியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்காக வந்து செல்கின்றனர். இதனால், கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் தலை தெரிந்த வண்ணாக உள்ளது.இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு இரட்டை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கோடை சுற்றுலாவுடன் சேர்ந்து சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகும் காட்சிகளை காணும் அரிய வாய்ப்பு கிட்டி உள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.








